Pages

Wednesday, November 11, 2009

விபசார வழக்கில் சிக்கிய புவனேஸ்வரி எழுத போகும் சுய சரிதை

புவனேஸ்வரி ஆளே மாறிவிட்டார். கோவில் கோவிலாக சென்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்துகிறார். வீட்டில் ஆன்மீக புத்தகங்களை வாங்கி குவித்து எப்போதும் அந்த புத்தகங்களும் கையுமாக இருக்கிறார்.

விபசார வழக்கில் இரண்டாவது முறை கைதான போது என்னை மட்டும் ஆண்டவன் ஏன் இப்படி சோதிக்கிறான் என்று அழுது கண்ணீர் விட்டார். சில நாட்கள் புழல் ஜெயிலில் இருந்த போது நலம் விரும்பிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். சொந்த வாழ்க்கையில் நடந்த பரபரப்பான விஷயங்கள் பற்றி சுயசரிதை எழுத முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

விடுதலையானதும் ஓரிரு நாட்கள் வீட்டிலேயே முடங்கினார். வெளியே போகும் போதெல்லாம் பர்தா அணிந்து சென்றார். கோவில்களில் அவரை இப்போது பார்க்க முடிகிறது. சென்னையில் உள்ள கோவில்கள், திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்கள் என சுற்றுகிறார்.சிறப்பு அர்ச்சனைகள் செய்து பய பக்தியோடு சாமி கும்பிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக பழைய சம்பவங்களில் இருந்து மீண்டு வருகிறார்.

இதற்கிடையில் புவனேஸ்வரி வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க சிலர் அவரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அப்படத்தில் புவனேசுவரியையே நடிக்க வைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். புவனேஸ்வரி தரப்பில் இருந்து இன்னும் அதற்கு இசைவு வரவில்லை.புவனேஸ்வரி எழுத போகும் சுய சரிதையில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்குமாம் .பிரபல எழுத்தாளர் கோஸ்ட் எழுத்தாளராக நடிகை சொல்ல சொல்ல எழுத போகிறாராம் . சுய சரிதையில் சிக்க போகும் பிரபலங்கள் அடிவயிற்றில் புளி கரைக்கிரதாம் .

1 comment:

  1. I dont know this book may definetaly unmask the higher society people faces who are all had relation ship with her. Good God.Help her.

    ReplyDelete