படப்பிடிப்பு முடிந்ததும் தயாரிப்பாளர் பண நெருக்கடியில் சிக்கினார். இதனால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. பலதடவை இப்படம் வெளியாகும் தேதியை அறிவித்து விட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி வைத்தனர். 7 வருடமாக படம் பெட்டிக்குள் முடங்கியது.

தற்போது ஒரு வழியாக பிரச்சினைகளில் இருந்து மீண்டு இன்று திரைக்கு வந்தது. நண்பர்கள் பற்றிய கதையே இப்படம். ஜெயராம், ஜோதிகா உள்ளிட்ட நண்பர்கள் சிலர் கூட்டமாக ஒரு திருமணத்துக்கு செல்கின்றனர். அங்கு இருவருக்குள்ளும் காதல் மலர்வதை காமெடியாக படமாக்கியுள்ளனர்.
தமிழில் ஜோதிகாவை கடைசியாக மணிகண்டா படத்தில் பார்க்க முடிந்தது. அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார். அதன் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
No comments:
Post a Comment