Pages

Wednesday, November 11, 2009

பங்காளியா பகையாளியா ? நடிகர்கள் நாடகம் அடித்து கொள்ளும் ரசிகர்கள்

நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் கைகளை குலுக்கி சில நிமிடங்கள் பேசிக் கொண்டதை பார்த்து ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர். அஜித் நடிக்கும் அசல் படத்தின் சூட்டிங் ஏவி.எம். ஸ்‌டூடியோவில் நடந்து வருகிறது. அதேபோல விஜய்யின் சுறா பட சூட்டிங்கையும் ஏவி.எம். ஸ்டூடியோவில் நடத்தி வருகிறார்கள். சூட்டிங்கில் ‌பங்கேற்க வந்த இரண்டு ஸ்டார்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் கைகளை குலுக்கி சில நிமிடங்கள் பேசினார்கள். அதன் பின்னர் இருவரும் புறப்பட்டு சென்றனர். இதனைப் பார்த்த சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

No comments:

Post a Comment