
மதுபானசாலைக்குரிய அனுமதிப்பத்திரம் இன்றி மதுபான விற்பனையில் ஈடுபட்டவருக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் ஐந்து லட்சத்துப் பத்தாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா பெறுமதியான மதுபான வகைகளை அழிக்கும் படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியிலுள்ள அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு முன்னால் கடந்த பல வருடங்களாக இயங்கி வரும் மில்லேனியம் விருந்தினர் விடுதி உரிமையாளருக்கே மேற்பபி அபராதம் விதிக்கப்பட்டது.
மதுபான விற்பனையின் போது, சுன்னாகம் பொலிஸார் இரண்டாம் தடவையாக இந்த விடுதியை முற்றகையிட்ட போதே உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குறிப்பிட்ட மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளரைப் பொலிஸார் யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி இரா.வசந்தசேனன் முன்னிலையில் ஆஜர் செய்தனர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விசாரனை முடிவில், குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே சுன்னாகம் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தில், நிறுவன உரிமையாளர் குற்றவாளியாகக் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment