Pages

Friday, November 13, 2009

வீடுதோறும் டிஜிட்டல் டி வீ ?

நாடு முழுவதும் கேபிள் "டிவி' ஒளிபரப்பு மூலம் அனைத்து சேனல்களையும் துல்லியமாக பார்க்கும் வகையிலும், கேபிள் "டிவி' தொழிலை வலுப்படுத்தவும் மத்திய அரசுக்கு "டிராய்' பரிந்துரை செய்துள்ளது. கேபிள் "டிவி' தொழில் பரந்து பட்டு இருந்தாலும், பல சேனல்கள் மக்களைச் சென்றடைவதில்லை. மேலும், கேபிள் மூலம் சேனல்களை அஞ் சல் செய்யும் போது, பிரதான அலைவரிசையில் தராமல் பின்னுக்கு தள்ளுவதால், பல சேனல்களை மக்கள் தெளிவின்றி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


இது, மக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் கேபிள் ஆபரேட்டர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்ததோடு, சந்தா வசூலிப்பதிலும் கஷ்டமாக இருந்தது. கேபிள் "டிவி' சென்றடையாத குக்கிராமங்கள் எவ்வளவோ நாட்டில் உள்ளன. இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கேபிள் "டிவி'யை முறைப்படுத்துவது தொடர்பாக பரிந்துரை வழங்கும் படி, இந்திய தொலைத் தொடர்பு ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. பல்வேறு நிலைகளில் ஆலோசனை நடத்திய "டிராய்,' இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது பரிந்துரையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது. டிராயின் பரிந்துரையை ஆலோசித்து வந்த மத்திய அரசு, அதை அமல்படுத்த கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது.


டிராய் பரிந்துரையில் கூறியிருப்பதாவது: பல "டிவி' சேனல்களையும், கேபிள் "டிவி' ஆபரேட்டர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில், "ஹிட்ஸ் டெக்னாலஜி' சேட்டிலைட் மூலம் டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்பு சேவை அளிக்கப்பட உள்ளது. இதன்படி பல்வேறு "டிவி' சேனல்களின் சிக்னல்களை, ஹிட்ஸ் டெக்னாலஜி சேட்டிலைட்டு'க்கு அப்லிங் செய்ய வேண்டும். இந்த சேட்டிலைட்டிலிருந்து அனைத்து சேனல்களையும் கேபிள் ஆபரேட்டர் கள் "டவுண் லிங்' செய்து, டிஜிட்டலாக மாற்றப் பட்ட சிக்னல் களை தங்களது கேபிள் மூலம் அஞ்சல் செய்வர். இந்த சிக்னல்கள், "சி-பாண்டு' மற்றும் "கேயு-பாண்டு'களில் கிடைக்கும். மேலும், இந்த சிக்னல் களை கேபிள் அல்லது எம்.எஸ்.ஓ.,க்கள் வழியாக மட்டுமே பெற முடியும். இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.


"ஹிட்ஸ் டெக்னாலஜி" தொழில் நுட்பம் குறித்த வழிகாட்டு முறைகள் குறித்து, நேற்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இந்த "ஹிட்ஸ் டெக்னாலஜி'யை அறிமுகப்படுத்துவதன் மூலம், கிராமப்புறங்களுக்கும் சேட்டிலைட் மூலம் டிஜிட்டல் சேவை அளிக்க முடியும். இந்த டிஜிட்டல் சேவை பெறுவதற்கு, வீடுகளில் செட்-டாப் பாக்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த சேவைக்கு மாற வேண் டும் என்பது கட்டாயமில்லை. தற்போது கேபிள் "டிவி' தொழிலில் உள்ள ஆபரேட்டர்கள், டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற வேண்டு மென விரும்பினால் மாறிக் கொள்ளலாம். இந்த புது தொழில் நுட்பம் அமலுக்கு வந்தால், கேபிள் ஆபரேட்டர்களுக்கு மூலதனம் மற்றும் நடைமுறை செலவுகள் குறையும்; சந்தாதாரர்களின் கட்டணமும் வெகுவாகக் குறையும். இந்த தகவல்களை அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment