பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன், போட்டோ கிராபரை தாக்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். உலக குத்து சண்டை போட்டியின் முன்னாள் சாம்பியனான மைக் டைசன் அடிக்கடி யாரையாவது தாக்கி விட்டு கைதாவது வாடிக்கையான ஒன்று. இவர் கொடுக்கும் அடி, உதையை பொறுக்க முடியாமல் இவரது முதல் மனைவியும் நடிகையுமான ராபின் கிவன்ஸ் விவாகரத்து வாங்கி விட்டார். 91ம் ஆண்டு கறுப்பின மாடல் அழகி டெசிரி என்ற பெண்ணை கற்பழித்து விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்; 97ம் ஆண்டு நடந்த குத்து சண்டை போட்டியின் போது ஆவேசமடைந்த டைசன், சக வீரர் ஹோலி பீல்டின் காதைக் கடித்து துப்பினார். இது போன்று ஏதாவது ஒரு வழக்கு, டைசன் மீது தொடரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பேட்டரி சார்ஜ் செய்வதில் இவருக்கும், போட்டோ கிராபர் ஒருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த டைசன், போட்டோ கிராபரை தாக்கியதில், அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக போட்டோ கிராபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக டைசனை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment