
தமிழ் திரையுலகில், "டூயட்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் சில படங்களையும் தயாரித்துள்ளார். பழம்பெரும் நடிகர் ஆனந்தனின் இளைய மகளும், நடிகையுமான லலிதா குமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து கோரி, சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட் டில் நடிகர் பிரகாஷ்ராஜ் மனு தாக்கல் செய்தார். ஆனால், பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து வாழ விருப் பம் தெரிவித்து, நடிகை லலிதா குமாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குடும்பநல கோர்ட் நீதிபதி ராமலிங்கம் முன் விசாரணைக்கு வந்தது. நடிகர் பிரகாஷ்ராஜ், அவரது மனைவி லலிதா குமாரி இருவரும் கவுன்சிலிங் மையத்தில் ஆஜராகினர். ஒன்றரை மணி நேரம் கவுன்சிலிங் நடந்தது. இருதரப்பிலும் உடன் பாடு ஏற்படவில்லை. தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க பிரகாஷ்ராஜுக்கு உத்தரவிடக் கோரி, லலிதா குமாரி மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. குடும்ப நல கோர்ட்டுக்கு பிரகாஷ்ராஜ், அவரது மனைவி லலிதாகுமாரி நேற்று வந்தனர். பரஸ்பர விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விட்டு, இருவரும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பிற்பகலில், இருவரிடமும் நீதிபதி டிக்காராம் விசாரணை நடத்தினார். விசாரணையை 18ம் தேதிக்கு நீதிபதி டிக்காராம் தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment