

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இந்த லட்டு தற்போது குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் கேட்கும் அளவுக்கு லட்டு வழங்கப்படுவதில்லை.
இலவச தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம் செய்வோருக்கு 2 லட்டும், கல்யாண உற்சவம் போன்ற சேவை டிக்கெட் வாங்குவோருக்கு பெரிய லட்டும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் புத்தாண்டு முதல் திருப்பதி லட்டை கூடுதலாக தயாரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன்படி கோவிலின் வலது புறம் அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் அறையில் தினமும் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். இதனால் பக்தர்கள் எவ்வளவு வேண்டு மானாலும் லட்டு வாங்கிச்செல்லலாம்.
இதுபற்றி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி கூறும்போது, புத்தாண்டு முதல் பக்தர்களுக்கு தாராளமாக லட்டு வழங்கப்படும். லட்டு அதிகமாக தயாரிக்கப்பட்டாலும் அதன் தரத்திலோ, ருசியிலோ எந்தவித மாற்றமும் இருக்காது என்றார்.
No comments:
Post a Comment