Pages

Saturday, November 21, 2009

அடுத்த தேர்தல் கூட்டு ரெட்டை இலையுடனா -மன்மோகன் சிங்க் சைகை ?

ஒபாமாவின் சிறப்பு அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் 5 நாள் பயணமாக இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை (ஞாயிறு) அவர் அமெரிக்கா சென்று சேருவார். திங்கட்கிழமை (23-ந்தேதி) முதல் அவர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

திங்கட்கிழமை அமெரிக்க- இந்திய வர்த்தக கழகங்கள் சார்பில் தொழில் அதிபர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதையடுத்து உட்ரோ வில்சன் அரங்கில் நடக்கும் வெளியுறவு கவுன்சில் நடத்தும் கூட்டத்தில் மன்மோகன்சிங் சிறப்புரையாற்றுகிறார். அதன் பிறகு அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

செவ்வாய்க்கிழமை (24-ந்தேதி) காலை பிரதமர் மன்மோகன்சிங் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு மிகப்பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படுகிறது.

அதன்பிறகு ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசுவார்கள். தீவிரவாதம், அணுசக்தி ஒப்பந்தம், சர்வதேச பொருளாதார தேக்கநிலை, தொழில் மேம்பாடு, பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் நீண்ட விவாதம் நடத்துவார்கள்.

பிரதமர் மன்மோகன்சிங் மீதும், இந்தியா மீதும் ஒபாமா மிகுந்த மதிப்பும், மதியாதையும் வைத்துள்ளார். அதை பிரதிபலிக்கும் வகையில் ஒபாமா பேச்சுவார்த்தை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க- இந்திய அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்காக கடந்த வியாழக்கிழமையே இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். இவர்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தீவிரவாதம் ஒழிப்பு, கல்வி, வர்த்தகம், முதலீடு, விவசாயம், சுகாதாரம், அணுசக்தி உள்பட சுமார் 10 பிரிவுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இது அமெரிக்கா, இந்தியா இரு நாடுகளுக்கும் உதவியாக இருக்கும். சீனா, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் அமையும் என்று கருதப்படுகிறது.

ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு ஒபாமாவும், மன்மோகன்சிங்கும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார்கள். அதன்பிறகு அமெரிக்க இந்திய தொழில் அதிபர்களுடன் மன்மோகன்சிங் பேச்சு நடத்துவார்.

இதையடுத்து மன்மோகன் சிங் மதிய விருந்துக்கு புறப்பட்டு செல்வார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோபிடென், வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் இருவரும் சேர்ந்து மன்மோகன்சிங்குக்கு மதிய விருந்து கொடுக்கிறார்கள்.

அன்று மாலை பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஒபாமா விருந்து கொடுக்கிறார். ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்றபிறகு அவர் அளிக்கும் முதல் மிகப்பெரிய விருந்து இதுவாகும்.

வழக்கமாக வெளிநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் உள்ள ஆர்னேட் அரங்கில் விருந்து கொடுப்பார்கள். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்குக்காக வெள்ளை மாளிகையில் பிரத்யேகமாக பிரமாண்ட கூடாரம் கட்டப்படுகிறது. இந்த விருந்தில் 400 பேர் கலந்து கொள்வார்கள்.

இந்த பிரமாண்ட விருந்தில் வழங்கப்படும் உணவு வகைகளின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அதிபர் மாளிகையில் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுவதை உலக தலைவர்களும், பணக்காரர்களும் மிகப்பெரிய கவுரமாக கருதுகிறார்கள்.

அதுவும் அமெரிக்க வரலாற்றில் எந்த நாட்டு தலைவர்களுக்கும் கொடுக்காத வகையில் மன்மோகன்சிங்குக்கு மிக விசேஷமாக ஒபாமா விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே இந்த விருந்து உபசரிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதன்கிழமை அமெரிக்க மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கிறார். அன்றுடன் அமெரிக்க நிகழ்ச்சிகளை பிரதமர் முடித்து கொள்கிறார்.

மறுநாள் 26-ந்தேதி வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் டிரினிடட் அண்ட் டுபாகோ நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடக்கும் காமென்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மன்மோகன்சிங் தாயகம் திரும்புகிறார்.

No comments:

Post a Comment