பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் ரீ-மேக்கில் நாயகனாக நடிகர் ஜீவன் நடிப்பார் என தெரிகிறது. எண்பதுகளில் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான சிவப்பு ரோஜாக்கள் அந்த காலத்து சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் குமார் ரீ-மேக் செய்து இயக்குகிறார். மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டவர்களுடன் இயக்குனர் பயிற்சி பெற்றிருக்கும் மனோஜ், சிவப்பு ரோஜாக்கள் படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். படத்தின் நாயகனாக நடிகர் ஜித்தன் ரமேஷ் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அந்த கேரக்டரில் நடிகர் ஜீவன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இது ஜீவனே கிளப்பி விட்ட வதந்தியாம் ?
No comments:
Post a Comment