Pages

Monday, November 23, 2009

மீண்டும் ஸ்வர்ணமால்யா சின்ன திரையில்

இளமை புதுமை நிகழ்ச்சியில் தோன்றி பறக்கும் முத்தம் கொடுத்து சின்னத்திரை ரசிகர்களை கிறங்கடித்த சொர்ணமால்யா திருமணத்துக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு சில சினிமாக்களில் தலைகாட்டிய அவர் இப்போது மீண்டும் சின்னத்திரையில் தோன்ற உள்ளார். இந்த முறை சீரியல் நாயகி. ஸீ தமிழ் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் யாதுமாகி நின்றாய் என்ற நெடுந்தொடரில் சொர்ணமால்யா நடிக்கிறார். திங்கள் முதல் வியாழன் வரை இரவு 7.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். இதில் சொர்ணமால்யாவுடன் நீரஜா, ஸ்ரீரேகா, காத்தாடி ராமமூர்த்தி, நரேந்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். சரவணன் இந்தத் தொடரை இயக்குகிறார். மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் யாதுமாகி நின்றாய் தொடரை தயா‌ரித்துள்ளது. வழக்கமான அழுகாச்சி தொடராக இல்லாமல், குற்றமே செய்யாத சில நிரபராதிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தண்டிக்கப்படும் துர்பாக்கிய சூழலை கதைக்களமாகக் கொண்டு இந்தத் தொடர்
உருவாகியுள்ளது. பெண்கள்தான் இந்தத் தொட‌‌ரின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒரு போலீஸ் அதிகா‌ரி, ஒரு சமூக சேவகி, ஒரு வழக்குரைஞர்... இவர்கள் தங்களுடைய சவால்களை எதிர்கொள்ளும்போது கணவனும், குடும்பமும் அதற்கு உறுதுணையாக இருந்தார்களா? என்ற குடும்ப சென்டிமெண்டும் இந்த‌த் தொட‌ரில் உண்டு.

No comments:

Post a Comment