Pages

Wednesday, November 18, 2009

தோல்விகளை அதிகம் பார்த்தேன்

வாழ்க்கையில் நான் ரொம்ப கஷ்டங்களை சந்தித்துள்ளேன். தோல்விகளை அதிகம் பார்த்தேன். பள்ளியில் படித்தபோது அமைதியான பெண். கால் கூட தெரியாத அளவுதான் ஆடை உடுத்துவேன். 10-வது வகுப்பு நான் படித்தபோது என் பின்னால் நிறைய மாணவர்கள் சுற்றினர். வகுப்பு வருவது வரை பள்ளி வாசிலேயே எதிர்பார்த்து காத்து நிற்பார்கள். பள்ளி முடிந்து போகும் போது வீடு வரைக்கும் வருவார்கள். நான் அவர்களை திரும்பி பார்ப்பதே இல்லை. அதனால் எந்த பிரச்சினையும் வரவில்லை.

பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற என்னை படம் எடுத்து பத்திரிகையில் போட்டனர். அதன் பிறகு என் வாழ்வே மாறியது. மாடலிங்கில் நுழைந்தேன். பெரிய டைரக்டர்கள் எல்லாம் நடிக்க அழைத்தார்கள். ஆனால் உலக அழகி போட்டியில் பங்கேற்பதில் தான் என் கவனமெல்லாம் இருந்தது. 1994-ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த அழகி போட்டியில் நீதான் உலக அழகி என்று அறிவித்தபோது எனக்குள் வீறிட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்லை.

அதை விட அதிக சந்தோஷத்தை அபிஷேக் பச்சனை திருமணம் செய்த தன் மூலம் அடைந்தேன். சுவிட்சர்லாந்தில் இருவரும் படப்பிடிப்புக்கு சென்றிருந்தோம். அப்போது அபிஷேக்பச்சன் தான் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக முதலில் சொன்னார். நான் மேல் அழகை பார்ப்பது இல்லை. மனதில் அழகு இருக்க வேண்டும். அபிஷேக்கிடம் இருந்தது. அவரது நகைச்சுவை உணர்வு ரொம்ப பிடிக்கும். மகிழ்ச்சியாக அவருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு ஐஸ்வர்யா ராய் கூறினார்.

No comments:

Post a Comment