
இதன்மூலம் ஹெட்லியும் ராகுல்பட்டும் நெருங்கி பழகியது தெரியவந்தது. ராகுல்பட்டிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு பிரிவினர், அவரை மும்பையை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
தீவிரவாதி ஹெட்லிக்கு ராகுல்பட் உதவி செய்தார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ராகுல்பட் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். புலனாய்வுப் பிரிவினர் விசாரணையில் அவர் மிரண்டுபோய் இருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக ராகுல் பட் கூறியதாவது:-
நண்பர் என்ற அடிப்படையில்தான் நான் ஹெட்லியுடன் பழகினேன். அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்ததாக கூறியதால் அவர் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது. அவர் சி.ஐ.ஏ. ஏஜெண்டாக இருப்பாரோ என்று நினைத்து அவரை நான் ஏஜெண்டு என்றே அழைத்தேன்.
ஹெட்லி அமெரிக்காவில் பிடிபட்ட தகவலை அறிந்த பிறகு அதிர்ச்சி அடைந்தேன். நானாகவே சென்று போலீசாரிடம் தகவல் தெரிவித்தேன். இந்த நாட்டு குடிமகன் என்ற அடிப்படையில் என் கடமையை செய்தேன்.
இந்த விஷயத்தில் போலீசாருக்கு உதவி செய்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் பத்திரிகைகள் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டன. ஹெட்லியுடன் பழகியதற்காக என்னை நம்பிக்கை துரோகி போல முத்திரை குத்தி விட்டனர்.
இவ்வாறு ராகுல்பட் கூறினார்.
No comments:
Post a Comment