
படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய சமீராரெட்டியிடம் "மறக்க முடியாத மோசமான நிகழ்ச்சி அது. “அசல்” படப்பிடிப்புக்காக சென்ற நான் கோலாலம்பூரில் நட்சத்திர ஓட்டலொன்றில் தங்கினேன். அப்போது லிப்டில் ஏறிய என்னை சிலர் தாக்கினர். கையை பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். பொதுவாக நான் அமைதியான பெண். யாரேனும் என்னை அவமானப்படுத்தினால் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஆனால் கோலாலம்பூர் ஓட்டலில் நடந்த சம்பவம் என்னை வேதனைப்பட வைத்தது. அது ஒரு கெட்ட கனவு.

முக்கிய பிரமுகரின் பாதுகாப்புக்காக வந்தபோது, காவலர்கள் அவர்கள் என்று பின்னர் எனக்கு தெரிய வந்தது. நாங்கள் ஒருத்தரையொருத்தார் தவறாக புரிந்து கொண்டதாலேயே அச்சம்பவம் நடந்தது."
No comments:
Post a Comment