Pages

Wednesday, November 18, 2009

புலிகளின் குரல்

விடுதலைப்புலிகள் இயக்கம் சார்பில் புதினம், புலிகளின் குரல் ஆகிய வெப்சைட்டுகள் இயங்கி வந்தன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்தது. அப்போது சிங்கள ராணுவம் விஷவாயு குண்டுகளை வீசி, விடுதலைப்புலிகள் வசம் இருந்த பகுதிகளை கைப்பற்றினர்.

இதனால் விடுதலைப்புலிகள் 2 வெப்சைட்டுகளின் இயக்கத்தை நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் புலிகளின் குரல் வெப்சைட்டை விடு தலைப்புலிகள் மீண்டும் தொடங்கி உள்ளனர். இந்த வெப்சைட்டில் இலங்கை தமிழகத்தில் உள்ள செய்திகள் ஒளிபரப்பப்படுகிறது.

சிங்கள ராணுவத்தால் அகதி முகாம்களில் தமிழர்கள் படும் சித்ரவதைகள், படுகொலைகள் பற்றியும் உடனுக்குடன் செய்தி ஒளிபரப்பாகிறது. அதில் 27-ந்தேதி மாவீரர் தினம் வழக்கம் போல் கொண்டாடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment