டேவிட் ஹேட்லி மட்டும் 9 முறை இந்தியா வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. அவனுக்கு இந்திப்பட டைரக்டர் மகேஷ்பட்டின் மகன் ராகுல்பட் தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். இதை கண்டு பிடித்த தேசிய புலனாய்வு குழுவினர் தொடர்ந்து ராகுல் பட்டிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டி உள்ளனர்.
இதில் டேவிட் ஹேட்லிக்கும் நடிகர் இம்ரான் ஹஸ்மிக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. ஹேட்லிக்கு, இம்ரான் ஹஸ்மியை ராகுல்பட் தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு இம்ரான் ஹஸ்மி “ராஸ்-2” என்ற இந்தி படத்தில் நடித்து கொண் டிருந்தார். அப்போது ராகுல்பட் டேவிட் ஹேட்லியை படப்பிடிப்பு தளத்துக்கே அழைத்து சென்று இம்ரான் ஹஸ்மியிடம் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன் பின்னர் மும்பை ஓட்டல் ஒன்றில் நடந்த விருந்திலும் டேவிட் ஹேட்லி, இம்ரான் ஹஸ்மி, ராகுல்பட்ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர்.
எனவே தேசிய புலனாய்வு குழுவினர் இம்ரான் ஹஸ்மியுடனும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
டேவிட் ஹேட்லியை 2 நடிகைகளிடமும் ராகுல்பட் அறிமுகப்படுத்தி உள்ளார். எனவே அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இம்ரான் ஹஸ்மியும், நடிகைகளும் டேவிட் ஹேட்லியின் தீவிரவாத செயல்களுக்கு உதவினார்களா? அல்லது தீவிரவாதி என்று தெரியாமலே பழகினார்களா? என்று தெரியவில்லை. தேசிய புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு பின்பே இதன் உண்மை வெளிவரும்.
நடிகைகளுடன் டேவிட் ஹேட்லி “செக்ஸ்” ரீதியான தொடர்புக்களுக்காக பழகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இரு தீவிரவாதிகளும் சமீப காலமாக இந்தியாவில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதில் கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களுக்கு இவர்கள் மூல காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இருவரும் மும்பைக்கு பலமுறை வந்து எங்கு தாக்க வேண்டும் என்றுஆய்வு நடத்தி உள்ளனர். அவர்கள் வகுத்து கொடுத்த திட்டப்படியே பின்னர் தாக்குதல் நடந் துள்ளது. அஜ்மல் உள்ளிட்ட 10 தீவிரவாதிகளும் மும்பையில் தாக்குதல் நடத்திய போது இவர்கள் இருவரும் பாகிஸ்தானில் இருந்து தேவையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர்.
இதற்காக இருவரும் முன் கூட்டியே பாகிஸ்தான் வந்து தங்கி இருந்ததை அமெரிக்க புலனாய்வு துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
மும்பை தாக்குதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நடந்தது. தாக்குதல் முடிந்து டிசம்பர் 7-ந் தேதி டேவிட் ஹேட்லி பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளான். தாவூர்உசேன் ரானா மேலும் 2 நாட்கள் தங்கியிருந்து விட்டு அமெரிக்கா சென்று இருக்கிறான். இருவரும் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் மாறி மாறி தங்கி உள்ளனர்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொண்டிருந்த போது இந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளின் தலைவர் கள் சாட்டிலைட் போன் மூலம் உரிய உத்தரவுகளை பிறப்பித்து கொண்டிருந்த னர். அவர்கள் பேசிய பேச்சை அப்போதே இந்திய புலனாய்வு துறையினர் பதிவு செய்து இருந்தனர்.
அதில் பாகிஸ்தானில் இருந்து பேசியவர்களில் 2 பேர் சாஜித்மிர், ரகுமான் சயீத் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரையும் தற்போது பாகிஸ்தான் போலீசார் கைது செய்து உள்ளனர்.
டேவிட் ஹேட்லியும், ரானாவும் அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் தலைவர்களிடம் பேசியவற்றை ஏற்கனவே அமெரிக்க உளவு துறையினர் பதிவு செய்து உள்ளனர்.
அந்த குரல் பதிவை அனுப்பி வைக்கும்படி இந்திய புலனாய்வு குழு கேட்டு உள்ளது.
மும்பை தாக்குதல் நடந்த போது சாட்டிலைட் போனில் பேசிய குரலும் டேவிட் ஹேட் லியுடன் பேசிய குரலும் ஒன்று தானா? அல்லது டேவிட் ஹேட்லி, ரானா ஆகியோரே நேரடியாக மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு கட்டளையிட்டார்களா? என்பதை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும்.
டேவிட் ஹேட்லிமும்பையில் தங்கி இருந்த போது சாட்டிலைட் போனை பயன் படுத்தி பேசி இருக்கிறான். இந்தியாவில் சாட்டிலைட் போனை பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ராணுவத்தினர், புலனாய்வு துறையினர், தூதரக அதிகாரிகள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த போனை பயன் படுத்த முடியும்.
ஆனால் டேவிட் ஹேட்லி பயன்படுத்தி உள்ளான். வெளிநாட்டினர் சாட்டிலைட் போனை கொண்டு வந்தால் விமான நிலையத்திலேயே கைப்பற்றி விடுவார்கள். எனவே டேவிட் ஹேட்லி அமெரிக்காவில் இருந்து போனை கொண்டு வந்திருக்க வாய்ப்பு இல்லை.
அவன் இங்கு வந்த பிறகு யாரோ அவனுக்கு கொடுத்து இருக்கிறார்கள். இங்குள்ள தீவிரவாதிகள் யாரோ ரகசியமாக கொடுத்திருக்க வேண்டும், அல்லது பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கொடுத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஹேட்லி இந்தியா வந்த போது பல முறை சாட்டிலைட் போனில் இங்கிருந்தபடி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் தலைவர்களிடம் பேசி இருக்கிறான்.
எனவே அவனுக்கு சாட்டிலைட் போன் கொடுத்தது யார்? என்றும் விசாரணை நடக்கிறது.
டேவிட் ஹேட்லி மார்ச் மாதம் இந்தியா வந்த போது 7-ந் தேதியில் இருந்து 10-ந் தேதி வரை டெல்லியில் தங்கி இருந்துள்ளான். அப்போது டெல்லியில் உள்ள 2 இன்டர் நெட் மையங்களுக்கு சென்று கம்ப்யூட்டரை பயன்படுத்தி உள்ளான். மார்ச் 8-ந் தேதி ஒரு இன்டர் நெட் மையத்துக்கு சென்ற அவன் 45 நிமிடம் அங்கிருந்து இ-மெயில் அனுப்பினான். சாட்டிங்கும் செய்துள்ளான். அடுத்து 9 மற்றும் 10-ந் தேதி இன்னொரு மையத்துக்கு சென்று உள்ளான்.
இரு மையங்களிலும் புலனாய்வு போலீசார் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் “ஹார்ட் டிஸ்க்” மற்றும் ஆவணங்¢களை கைப்பற்றி சென்றனர்.
தீவிரவாதிகளில் ரானா கேரளா மாநிலம் கொச்சிக்கு வந்ததுடன் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகை களில் விளம்பரமும் கொடுத்து இருந்தான். அவன் கொடுத்த விளம்பரத்தில் 09867833413 என்ற போன் எண் கொடுக்கப்பட்டு இருந்தது.
அந்த போனில் அப்போது யார்-யார்? பேசினார்கள் என்ற தகவலையும் திரட்டி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் பேசி இருந்தது தெரிய வந்தது. அவர்கள் பட்டியலை திரட்டி வருகின்றனர். அவர்கள் தற்போது ஊரில் இருக்கிறார்களா? அல்லது வெளிநாட்டுக்கு அனுப் பப்பட்டு விட்டார்களா? இவர்களில் யாராவது தீவிர வாதிகள் இயக்கத்தில் சேர்ந்து இருக்கிறார்களா? என்று விசாரணை நடக்கிறது.
டேவிட் ஹேட்லி, ரானா கொடுத்த தகவலின் படி வங்காளதேசத்தில் 3 தீவிரவாதிகளை அந்த நாட்டு போலீசார் கைது செய்தனர். 3 பேரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி இருந்தனர். அவர்கள் 20 தீவிரவாதிகளை இந்தியாவில் தாக்குதல் நடத்த தயார்படுத்தி இருப்ப தாக தெரிவித்தனர். அவர் களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப் பிட்டு உள்ளனர். அவர்கள் ரானா தேர்ந்தெடுத்து அனுப்பிய தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகமும் உள்ளது.
தீவிரவாதி ரானா கனடா குடியுரிமை பெற்றவன். அமெரிக்காவில் தங்கி இருந்தான். கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்டுவபர் தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மன் மோகன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது ரானா பற்றிய தகவல்களை பிரதமர் மன்மோகன்சிங், ஸ்டீபன் ஹார்டுவரிடம் தெரிவித்து விசாரணைக்கு தேவையான உதவிகளை தரும்படி கேட்டுக்கொண்டார்.
ரானாவிடம் அமெரிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவன் மீதான குற்றச்சாட்டை நாளைக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த அவகாசத்தை நீடிக்கும் படி போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 14-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment