
அஜ்மலிடம் விசாரணை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவன் அளித்த பதில் டாக்குமென்டரி படத்தில் இடம் பெற்று இருந்தன. அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் எப்படி சேர்ந்தீர்கள்?
பதில்:- எங்கள் குடும்பத்துக்கு பணத்தை கொடுத்து தீவிரவாத இயக்கத்தில் சேர வைத்தனர். எங்களுக்கு பணம் தேவைப்பட்டது. நாங்கள் தொடர்ந்து ஏழையாக இருக்க விரும்பவில்லை. எனது சகோதரர்கள், சகோதரிகளுக்கு திருமணமாகவும், தொடர்ந்து நல்ல வாழ்க்கை வாழவும் பணம் கிடைத்தது. அதனால் என் தந்தை என்னை தீவிரவாதிகளிடம் விற்று விட்டார்.
கேள்வி:- இதை உங்கள் தந்தை ஒத்துக்கொள்வாரா?
பதில்:- ஆமாம். நான் சொல்வதை தான் அவர் சொல்வார்.
கேள்வி:- உங்கள் தந்தை என்ன தொழில் செய்கிறார்?
பதில்:- ரொட்டி துண்டுகள், உருளைக்கிழங்கு திண் பண்டங்களை தெருவில் விற்று பிழைப்பு நடத்துகிறார்.
கேள்வி:- தீவிரவாதிகள் உங்கள் தந்தைக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்? அந்த பணத்தை உங்கள் பாங்கி அக்கவுண்டில் போட்டார்களா?
பதில்:- எனக்கு அக்கவுண்டு எதுவும் கிடையாது. பணத்தை தந்தையிடமே கொடுத்தனர்.
கேள்வி:- எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?
பதில்:-அது எனக்கு தெரியாது. பல லட்ச ரூபாய் இருக்கும்.
கேள்வி:- எவ்வளவு காலம் பயிற்சி பெற்றீர்கள்?
பதில்:- 3 மாதம் பயிற்சி பெற்றேன். 24 அல்லது 25 வகுப்புகள் எடுத்தனர்.
கேள்வி:- உங்களுடன் பயிற்சி பெற்றவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?
பதில்:- அதை எல்லாம் சொல்ல மாட்டார்கள். எனக்கு ஒருவரை மட்டும் தான் தெரியும். அவர் லாகூரை சேர்ந்தவர். அவர் எனது நண்பராகி இருந்தார்.
கேள்வி:- ஒருவருடன் ஒருவர் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்களா?
பதில்:- மற்றவர்களுடன் பேச தடை விதித்து இருந்தனர். இதில் கண்டிப்பாக நடந்து கொண்டனர். 3 மாதம் பயிற்சி கொடுத்த பின்பே தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி விட்டனர் என்று எங்களை தேர்வு செய்தனர்.
கேள்வி:- மக்களை கொல்வதால் உங்களுக்கு ஏற்படும் உணர்வு குறித்து அவர்களிடம் நீங்கள் கேள்வி எதுவும் கேட்கவில்லையா?
பதில்:- நான் கேட்டேன் ஆனால் அவர்கள் “நாங்கள் சொல்வதை நீ செய்தால் நீ பெரிய மனிதனாகி விடுவாய்” சொர்க்கத்தில் உனக்கு பரிசு தரப்படும் என்றனர்.
கேள்வி:- இதற்காகத்தான் இந்த புனித போருக்கு வந்தாயா? இது சரியானது தானா?
பதில்:- என்ன புனித போர்?... (அழுது கொண்டே பதில் சொன்னான்).
கேள்வி:- நீ அழுவதால் எந்த பலனும் இல்லை. உண்மையை சொல். இது சரியா? தவறா?
பதில்:- நான் சொல்வது உங்களுக்கு புரியவில்லை.
இவ்வாறு பதில் கூறினான்.
மும்பை ஓபராய் ஓட்டலில் 36 மணி நேரம் போராடி கடைசியில் உயிரிழந்த பகதுல்லா என்ற தீவிரவாதி கடைசி நேரத்தில் குளியல் அறைக்குள் இருந்தபடி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய டேப்பும் டாக்குமென்டரி படத்தில் இடம் பெற்று இருந்தது.
அதில் அவன் “என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லை. வெடி பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. உணவு எதுவும் இல்லை” என்று கூறுகிறான்.
அதற்கு பாகிஸ்தானில் இருந்து பதில் அளித்த தீவிரவாதி “போலீசாரிடம் கைதாகி விடாதே, கடைசி வரை போராடு, பயப்படாதே, உனக்கு கொடுத்த பணி நிறைவடையும் போது நீ கொல்லப்படுவாய் உனக்காக கடவுள் சொர்க்கத்தில் காத்திருப்பார்” என்று கூறுகிறான்.
No comments:
Post a Comment