சென்னை அருகே கடலுக்குள் பதுங்கி இருந்த 2 ஆஸ்திரேலியர்கள் போலீசில் சிக்கினர். இவர்கள் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக 2 நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக மாநில அரசுகளை உஷார்படுத்தி மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து கல்பாக்கம் அனல்மின் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அனல் மின்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடலோர காவல் படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இந் நிலையில் கல்பாக்கம் அனல்மின் நிலையம் அருகே 2 வெளிநாட்டினர் கடலுக்கு அடியில் பதுங்கி இருந்த போது போலீசில் சிக்கியதாக தகவல்கள் வெளியானது.
இவர்கள் இருவரும் தீவிரவாதிகளா? என விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இவர்கள் இருவரும் மகாபலிபுரத்தில் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட்சன், ராபர்ட் ஆகிய 2 பேர் மகாபலிபுரம் கடல் பகுதியில் வைத்து பிடிபட்டனர். “ஹீபா டைவிஸ்” என்ற ஆழ்கடல் நீச்சல் பயிற் சிக்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர்.
இது தொடர்பாக அரசிடம் முறைப்படி இருவரும் அனுமதி வாங்கியுள்ளனர். அவர்களது விசா காலம் அடுத்த ஆண்டு (2010) மார்ச் மாதம் வரை உள்ளது. மற்றபடி இவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment