Pages

Wednesday, November 18, 2009

அந்நாட்டு பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரம சிங்கே சூளுரை?


இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 26 ஆண்டுகளாக சண்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந்தேதி முல்லைத்தீவில் நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்? இதை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது.

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் வாழ்ந்த 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டனர். தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

போர் நடைபெற்றபோது இலங்கையில் அவசர கால சட்டம் நடைமுறையில் இருந்தது. தற்போது போர் முடிவுக்கு வந்ததால் அச்சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இந்த தகவலை அந்நாட்டு பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரம சிங்கே தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. இன்னும் ஆங்காங்கே மறைமுகமாக தீவிரவாதம் (விடுதலைப்புலிகள் இயக்கம்) உள்ளது. தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்புக்கு அவசரகால சட்டம் நிச்சயம் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் இலங்கை அரசின் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment