
மலையாள பட உலகின் பிரபலமான இரட்டை டைரக்டர்கள் பிரமோத் பப்பன். மம்முட்டி-வசுந்தராதாஸ் நடித்த `வஜ்ரம்,' மம்முட்டி-நயன்தாரா நடித்த `தஷ்கரவீரன்' ஆகிய படங்களை டைரக்டு செய்த இவர்கள், முதன்முதலாக ஒரு தமிழ் படத்தை டைரக்டு செய்கிறார்கள்.
கதை நாயகியாக நமீதா நடிக்கும் இந்த படத்துக்கு, `நில் கவனி என்னை காதலி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. மலையாளத்தில் தயாரிக்க முடிவு செய்யப்பட்ட இந்த படம், இப்போது மலையாளத்தில் தயாரிக்கப்படாமல் நேரடி தமிழ் படமாக மட்டுமே உருவாகி வருகிறது.
கதாநாயகனாக `அன்பு' பாலா நடிக்க, கலாபவன் மணி, பவன், ஆசிஷ் வித்யார்த்தி, மகாதேவன், கிரேன் மனோகர் ஆகியோரும் பங்குபெறுகிறார்கள்.
கதை-ஒளிப்பதிவு-டைரக்ஷனை பிரமோத் பப்பன் கவனிக்க, திரைக்கதை அமைத்திருப்பவர், ராஜேஷ் ஜெயராம். கண்மணி ராஜா முகமது வசனம் எழுதியிருக்கிறார். அபிஷேக், இசையமைக்கிறார். கிச்சு பிலிம்ஸ் சார்பில் ஜெயதீஷ் சந்திரன் தயாரிக்கிறார்.
தொழில் நகரமான திருப்பூரில் தந்தை-தங்கையுடன் வசிக்கும் நமீதா மீது, அடாவடியான போலீஸ் அதிகாரி கலாபவன் மணி ஆசைப்படுகிறார். நமீதாவை அடைவதற்காக, அவருடைய தந்தையை சுட்டுக்கொல்கிறார்.
தந்தையை பறிகொடுத்த நமீதா, கலாபவன் மணியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை கதை சித்தரிக்கிறது.
No comments:
Post a Comment