Pages

Wednesday, November 18, 2009

சென்னை பெசன்ட் நகரில் காதலர்கள் ?

அந்த பெண்ணிற்கு 16 வயது இருக்கும் முட்டிக்கு மேல் குட்டை பாவாடை அழகான காட்டன் சர்ட் ஒரு சினிமா கதாநாயகி போல் இருந்தாள். அவள் அருகில் அம்மாஞ்சி போல அமர்ந்திருந்த ஆங்கிலோ இந்தியன் வாலிபருக்கு 18 வயது இருக்கும். இருவரும் பெசன்ட் நகர் கடற்கரையில் ஒரு காரின் முன் பகுதியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரும் காதலர்கள் என்று நினைக்க தோன்றியது அந்த பையன் பெண்ணிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தான். அவ்வப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து கொள்வதும் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொள்வதுமாக இருந்தனர். திடீர் திடீரென மெல்லிய புன்சிரிப்புக்கு பின்னர் “ஆங்கில முத்தத்தை” பறிமாறிக்கொண்டனர்.

அந்த பெண்ணின் கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அதில் உள்ள பட்டன்களை மெசேஜ் அனுப்புவதற்காக அழுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மற்றொரு காரில் முகத்தில் மீசை கூட அறும்பாத பால்வடியும் முகமாய் 14 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அவர் ஜீன்ஸ் பேண்டும் டி-சர்ட்டும் அணிந்து ஸ்டைலாக இருந்தார்.

அந்தப் பெண்ணிடம் சென்று சகஜமாக பேசினார். அந்த பெண்ணின் வலது புறத்தில் அமர்ந்து கொண்டார். அவரும் ஏற்கனவே இருந்த வாலிபரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ள வில்லை. புதிதாக வந்தவரிடம் நெருங்கி பேசினார். இது ஆங்கிலோ இந்திய வாலிபருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

சட்டென்று அந்தப்பெண்ணை கையை பிடித்து இழுத்துக்கொண்டு, அருகில் உள்ள “காபி ஷாப்” ஒன்றிற்குள் புகுந்தார்.

அந்த பெண்ணை தொடர்ந்து 2-வது நபரும் கடைக்குள் வந்தனர். இதற்கிடையே மின்னல் வேக பைக் ஒன்றில் ஸ்டைலாக 3-வதாக ஒரு வாலிபர் அங்கு வந்தார். அவரும் அதே பெண்ணிடம் சென்றார். அந்த பெண்ணின் கைகளை பிடித்து முத்தம் ஒன்று கொடுத்தார்.

ஆனால் முதலில் அழைத்து வந்த நபர் பொறுமை சாலியாக இருக்க வேண்டும்! கூலாக காபி குடித்துக் கொண்டிருந்தார். நான் உனக்காக காத்திருக்கிறேன் சீக்கிரம் வந்து விடு என்று கூறி விட்டு கடைக்கு வெளியே செல்போனை நோண்டியபடி தவமிருந்தார்.

இருந்தாலும் அந்தப்பெண் அவ்வப்போது முதல் நபருக்கு “முத்தம்” கொடுத்துக் கொண்டிருந்ததார். செல்போனில் ஒரு அழைப்பு வர அதை எடுத்துக் கொண்டே கடைக்கு வெளியே வந்து தெருவில் “கேட்வாக்” செய்தபடியே பேசினார். 4-வதாக ஒரு வாலிபர் காரில் வந்து இறங்கினார்.

ரோட்டிலேயே இருவரும் கட்டி பிடித்துக்கொண்டனர்.
அவரும் அதே கடைக்குள் சென்றார். முதல் வாலிபருடன் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்கி கொண்டு, அந்த பெண்ணுடன் பேச்சை தொடர்ந்தார். கையை பிடித்து தன்னுடன் வரும்படி அழைத்தார். முதல் வாலிபரோ கண்கள் கலங்கியபடி அந்த பெண்ணின் முகத்தை பார்த்தார். அந்த பெண்ணுக்கு பரந்தமனசு. இன்றைக்கு இவரோடு... நாளைக்கு நாம மீட் பண்ணுவோம் என்று 4-வது நபரை இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் ஒன்று கொடுத்தார்.

வந்தவரை லாபம் என்று நினைத்த அவர் கோபம் தணிந்து வந்த காரில் ஏறி புறப்பட்டார். இருந்தாலும் 2 பேர் காத்திருந்தனர். அப்போது சில நண்பர்களுடன் அந்த கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் (5-வது நபர்) ஆச்சர்யமாக அந்த பெண்ணிடம் சென்றார். ஒருவருக்கொருவர் ஹாய்... சொல்லிக் கொண்டனர்.

அவரும் அந்தப் பெண்ணின் அருகில் நெருக்கமாக அமர்ந்து பேசினார். காதில் ஏதோ சொல்லி அழைக்க அவர் வெளியில் வந்தார். நண்பர்களுக்கு டாடா... காட்டி விட்டு அந்த பெண்ணை அழைத்து செல்ல முயன்றார்.

அவரிடமும் நேக்காக பேசிய அந்தப்பெண் ஒரு முத்தம் கொடுத்தார். 5-வது நபர் நண்பர்களுடன் சென்று விட்டார்.

அதே பாணியில் 2-வது நபருக்கும் 3-வது நபருக்கும் கட்டிபிடி வைத்தியமும், முத்த மருந்தும் கொடுத்தார். அந்த 2 இலவு காத்த கிளிகளும் (வாலிபர்களும்) வந்த வழியாக சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து, தன்னை அழைத்து வந்த முதல் வாலிபரை கட்டி அணைத்தப்படி காரில் ஏறிச் சென்று விட்டார்.

நேற்று இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த இந்த வேடிக்கை வினோத விளையாட்டை கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள் சுவாரசியமாக கண்டு களித்தனர்.

சட்டையை மாற்றுவது போல் காதலர்களை மாற்றிக் கொண்டு திரிவது தமிழ் கலாச்சாரத்தில் இல்லை. கேட்டால் காதல் இல்லை நட்பு என்கிறார்கள்.

No comments:

Post a Comment