
இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே கடந்த 2005-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றார். அவரது பதவி காலம் வருகிற 2011-ம் ஆண்டு முடிகிறது. விடுதலைப்புலிகளுடனான போரில் ராணுவம் வெற்றி பெற்றதன் மூலம் தனது செல்வாக்கு உயர்ந்துள்ளதாக ராஜபக்சே கருதுகிறார்.
எனவே பதவி காலம் முடிவதற்கு முன்பே அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. அதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment