Pages

Wednesday, November 4, 2009

காதலுக்கு பெற்றோர் க்ரீன் சிக்னல்

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகருக்கு இம்மாதம் 29ம்தேதி திருமணம் நடைபெறுகிறது. தமிழில் ‌விஜய்யுடன் நெஞ்சினிலே படத்திலும் அர்விந்த் சாமியுடன் 'என் சுவாச காற்றே ' படத்திலும் நடித்தவர் . இவருக்கும் மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் தொழிலதிபர் ‌டிம்மி நரங் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நரங்கை பல மாதங்களாகவே இஷா காதலித்து வந்தார். இதுதொடர்பாக அவ்வப்போது பத்திரிகைகளில் கிசுகிசுக்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டதைத் தொடர்ந்து திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29ம்‌தேதி நரங் - இஷா திருமணம் முமபையில் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment