Pages

Wednesday, November 4, 2009

ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல்


ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 30க்கும் அதிகமான மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்றுமுன்தினம் மெல்போர்ன் நகரில் உள்ள லெவர்டோன் பகுதியில், இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர் அம்ரித் கோயல்(36) மீது, ஒரு பெண் உட்பட மூன்று பேர் தாக்குதல் நடத்தினர்.


இது குறித்து, அம்ரித் குறிப்பிடுகையில், ""என் வீட்டுக்கு வெளியே நான் நின்றிருந்த போது, ஒரு பெண் உட்பட மூன்று பேர் என்னை நோக்கி வந்து திடீரென என் இடது கண் மீது குத்தினர். ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் படி, என்னை மிரட்டினர். உடனடியாக நான் போலீசுக்கு போன் செய்தேன். ஆனால், போலீசார் ஒன்றரை மணி நேரம் கழித்து தான் வந்தனர். அதற்குள் என்னை தாக்கியவர்கள் ஓடிவிட்டனர்,'' என்றார். இந்த தாக்குதல் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment