Pages

Wednesday, November 4, 2009

சீனாவின் சேவை மனப்பான்மை செக்ஸ் பொம்மை

மனைவியை பிரிந்து வேறிடங்களில் வேலை பார்க்கும் சீனர்கள், சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்வதை தவிர்த்து, செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தும் படி சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உலகிலேயே சீனாவில் தான் மக்கள் தொகை அதிகம். 130 கோடிக்கும் அதிகமான ஜனத்தொகை கொண்ட சீனாவில், அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்பது இயலாத காரியம். எனவே, லட்சக்கணக்கான சீனர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கின்றனர். இன்னும் பலர் பல மாகாணங்களில் குடிபெயர்ந்து வேலை செய்கின்றனர். வயிற்று பிழைப்புக்காக, மனைவியை விட்டு விட்டு வெவ்வேறு இடங்களில் பல இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


பல்வேறு இடங்களுக்கு சென்று பணிபுரியும் இளைஞர்கள் விரக தாபத்தால், சிகப்புவிளக்கு பகுதிகளுக்கு செல்வதால் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க செக்ஸ் பொம்மைகளை பயன்படுத்தும் படி சீனாவின் குவாங்டாங் மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பணி புரியும் இடத்தில் அவர்களுக்காக தனி அறை ஒன்றை கட்டி தரவும், இந்த அறையில் ஒரு சில மணி நேரம் தங்கள் மனைவியுடன் தனிமையாக இருக்கவும் தொழிலாளர்களுக்கு வசதி செய்து தர குவாங்டாங் நிர்வாகம் முன்வந்துள்ளது. இலவசமாக செக்ஸ் பொம்மைகளை வழங்கவும் குவாங்டாங் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எய்ட்ஸ் நோய் போன்ற பாதிப்புகளை தவிர்க்க இந்த மாகாண அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment