Pages

Tuesday, November 10, 2009

சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்

புதுடில்லி

அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது முழு விவரங்களை வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது உள்கட்டமைப்பு வசதிகள், கல்வி தகவல்கள் உட்பட முழுமையான விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தங்களது நிதி நிலவரம், மொத்த சொத்து மதிப்பு, தர அங்கீகார விவரம், ஆசிரியர்களது புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்கள், கல்வி கட்டணம், வேலை வாய்ப்புகள் ஆகிய தகவல்களை மாணவர்களும், பெற்றோரும் அறிந்துகொள்ளும் வகையில், அந்தந்த கல்வி நிறுவனங்களின் வெப்சைட்டில் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment