Pages

Tuesday, November 10, 2009

ராஜபக்ஷேவின் தங்கை நிருபமாவிற்கு கருப்பு கோடி

மண்டபம்:

ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கைக்கு கறுப்புக்கொடி காட்டிய ம.தி.மு.க.,வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் தங்கை நிருபுமா.


இவர் தனது கணவர் திருகுமரன் நடேசனுடன் நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்தார். அங்குள்ள தெற்கு ரத வீதியில் கந்தர்வ சத்திரத்தில் பூஜை செய்து கொண்டிருந்த போது, ம.தி.மு.க., நகர் இளைஞரணி செயலர் தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தினர், கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதுபோல் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கறுப்புக்கொடி காட்டிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment