எப்போ நம்பர் ஒன் ஆகப்போறீங்க? அதிக படங்களில் நடிக்கிறவங்க நம்பர் ஒன்னா? நல்ல படங்களில் நடிக்கிறவங்க நம்பர் ஒன்னா? இதுல ரெண்டாவதுதான் சரி என்றால் நான்தான் நம்பர் ஒன். அப்போதும் சரி, இப்போதும் சரி, எத்தனை படங்களில் நடித்தோம் என்று எண்ணிப் பார்க்கவில்லை. என்ன படத்தில் நடித்தோம். என்ன சாதித்தோம் என்றுதான் பார்க்கிறேன். அந்த வகையில் நான் எனக்கு எப்போதுமே முன்னணி நடிகைதான்.

‘அசல்' படத்தில் இரண்டாவது ஹீரோயின், தங்கை கேரக்டர் என்றெல்லாம் செய்தி வருகிறதே?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நானும் ஒரு ஹீரோயின். என்னுடைய கேரக்டர் பிடித்திருந்ததால் நடிக்கிறேன். வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கவில்லை. அஜீத்துடன் இரண்டு டூயட் பாடல் இருக்கிறது. அவருக்கு ஜோடியாகத்தான் நடிக்கிறேன். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். படம் வெளிவரும்போது எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும்.
‘நான் கடவுள்Õ படத்தில் நடிக்காததற்கு வருந்துகிறீர்களா?
அப்போது வருந்தியது உண்மை. அஜீத்துடன் அந்தப் படத்திலேயே நடிக்க வேண்டியது. ஆனால் அஜீத்தும் அதில் நடிக்கவில்லை. அன்று இழந்ததை இன்று பெற்றிருக்கிறேன்.
தெலுங்கில் மட்டும் கிளாமராக நடிக்கிறீர்களே?
தெலுங்கில் சில படங்களில் மாடர்ன் உடை அணிந்து நடித்தேன். அப்படி நடிக்கிற வாய்ப்பு தமிழ் படத்தில் அமையவில்லை. ‘ஜெயம்கொண்டான்' படத்தில் பாடல் காட்சிகளில் நடித்தேன். மலையாளத்தில் ‘ட்வண்டி ட்வண்டி', ‘ராபின்ஹூட்' படங்களில் மாடர்னாக நடித்திருக்கிறேன். கிளாமராக நடிக்க கூடாது என்பதெல்லாம் இல்லை. அதுமாதிரி கேரக்டர்கள் அமைந்தால் நடிக்க தயக்கமில்லை. ஆனால் எனக்கு பிடித்தது ஹோம்லி கேரக்டர்கள்தான். இப்போதுகூட மலையாளத்தில் ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்' படத்திலும், தெலுங்கில் 'மகாத்மா' படத்திலும் ஹோம்லியாகத்தான் நடித்துள்ளேன்.
ஒரு வருடத்துக்கு மலையாளத்தில் இரண்டு, தெலுங்கிலும், தமிழிலும் ஒன்று என்று கணக்கு வைத்து நடிக்கிறேன். அதற்கே ஒரு வருடம் போதவில்லை. அதன்பிறகு எப்படி நான் மற்ற மொழி பற்றி யோசிக்க முடியும். நல்ல வாய்ப்பு வந்தால் மிஸ் பண்ண மாட்டேன்.
No comments:
Post a Comment