
<
இவர், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, ஆலப்புழா அருகே காரில் செல்லும்போது கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை மாநில போலீசார் விசாரிப்பதில் திருப்தி இல்லை என்றும், சி.பி.ஐ.,விசாரிக்கவேண்டும் என்றும், கேரள மாநில ஐகோர்ட்டில் கொலையான பால் எம்.ஜார்ஜின் தந்தை முத்தூட் ஜார்ஜ் உட்பட பலர் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜூ புழங்கரா என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கொலையான பால் எம்.ஜார்ஜின் உடலில் உள்ள காயங்கள் குறித்து, மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்படவேண்டும். இதன் மூலம், கொலை குறித்து, பல்வேறு ஊகங்கள் வெளி வருவது தவிர்க்க உதவும். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் போலீஸ் காவல் ஏற்படுத்தவேண்டும்.
இவ்வழக்கை, சி.பி.ஐ.,வசம் ஒப்படைக்கவேண்டும் என்று, பால் எம்.ஜார்ஜின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் என்னையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வழக்கில், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ., விசாரணை அவசியம் தேவை. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment