Wednesday, November 11, 2009
கதைக்கு சொந்தம் கொண்டாடி கண்ணீர் வடிக்கிறார் ஒரு கதாசிரியர்.
தெலுங்கு திரையுலகை மட்டுமல்ல தென்னகத்தையை திக்குமுக்காட வைத்திருக்கிறது மஹதீரா படத்தின் வசூல். கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் பார்த்துள்ள மஹதீராவை தமிழில் வெளியிடும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், மஹதீரா கதைக்கு சொந்தம் கொண்டாடி கண்ணீர் வடிக்கிறார் ஒரு கதாசிரியர். அவர் பெயர் காந்திகோபால். டைரக்டர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்த அனுபவத்துடன் கதை எழுதத் தொடங்கியவர் இந்த காந்தி கோபால். அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கொடுத்துள்ள புகாரில், ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மகதீரா படத்தின் கதை என்னுடையது. இந்த கதையை தயாரிப்பாளர் அல்லு அரவிந்திடம் நான் சொன்னதற்கு என்னிடம் ஆதாரங்கம் உள்ளன. எனவே எனக்கு கதைக்கான சம்பளம் தர வேண்டும், என்று கோரியிருக்கிறாராம். இதுபற்றி விசாரித்த எழுத்தாளர்கள் சங்கம், காந்தி கோபாலுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதி பெப்சிக்கு அனுப்பி விட்டார்களாம். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் காந்தி கோபால்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment