Pages

Sunday, November 22, 2009

பெங்காலி படத்தில் நடிகை சாயாசிங்

திருடா திருடி படத்தில் துறுதுறு பெண்ணாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாயாசிங். அந்த படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் சாயாசிங்கிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். வல்லமை தாராயோ படத்தில் நடித்ததன் மூலம் ஹோம்லி இமேஜை பெற்ற சாயாவிற்கு, அடுத்தடுத்து கிளாமர் பட வாய்ப்புகளே வந்தன. கிளாமராக நடிக்‌க விரும்பாத அவர், தெலுங்கு பக்கம் போனார். தற்போது பெங்காலி படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். படம் மூலம் அறிமுகமான சாயாசிங், பெங்காலி படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார்.
நல்ல கதை, கேரக்டர் அமைந்ததால் பெங்காலி படத்தில் நடிப்பதாக கூறும் அவர், தமிழிழும் நல்ல கதை மற்றும் கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என்றும் கூறுகிறார்.

No comments:

Post a Comment