அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் யுபா சிட்டி என்ற நகரம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமெரிக்காவில் முதல் முதலாக இந்தியர்கள் இந்த நகரத்தில் தான் குடியேறியதாக கூறப்படுகிறது. சீக்கியர், இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த, 15 ஆயிரம் இந்தியர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில், பெரும்பான்மையானோர் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.இந்த நகரத்தில் மொத்த மக்கள் தொகை 65 ஆயிரம் தான். இந்த நகரத்தின் மேயராக, பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் காஷ்மீர் கில் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு விழா, யுபா சிட்டியில் சமீபத்தில் நடந்தது. யுபா சிட்டியை தவிர, அமெரிக்காவின் மற்ற நகரங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். விருந்தினர்களுக்கு, சமோசா, சென்னா மசாலா, சப்பாத்தி போன்ற இந்திய உணவு வகைகள் சுடச் சுட பரிமாறப்பட்டன. பஞ்சாபின் பிரபலமான "பாங்க்ரா' நடனத்துடன், இசை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது.
No comments:
Post a Comment