
ரஜினி பிறந்த நாள் விழாவை வருகிற 12-ந்தேதி சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். பிறந்த நாளில் யாரையும் ரஜினி சந்திப்பது இல்லை. ஒரு வருடத்துக்கு முன் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தபோது, பிறந்த நாளில் நான் யாரையும் சந்திப்பது இல்லை. என் குடும்பத்தினர் கூட எனக்கு இடையூறு செய்யமாட்டார்கள். அன்றைய தினத்தை தனிமையில் இருந்து நான் ஏன் பிறந்தேன் என்று யோசிக்க செலவிடுவேன் என்றார். எனவே பிறந்த நாளில் தியானத்தில் ஈடுபடுவார்.
ரஜினி பிறந்த நாளையொட்டி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் 106 சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது. வருகிற 23-ந்தேதி இந்த ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னடபட இயக்குனர் ராமநாதன் செய்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் ரஜினியின் தர்மதுரை படத்தை கர்நாடகாவில் விநியோகம் செய்து நிறைய சம்பாதித்தவர். அந்த நன்றி கடனுக்காக சண்டி ஹோமத்தை நடத்துகிறார். ரஜினியும் அவர் குடும்பத்தினரும் ஆரோக்கியமாக வாழ வேண்டி இந்த ஹோமம் நடத்தப்படுகிறது.
பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். ஏழைகளுக்கு உதவி வழங்குதல், ரத்த தானம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
அண்ணா நகரில் ஏழைகளுக்கு உணவு, வேட்டி சேலைகளை ரஜினிடில்லி, ஸ்ரீகாந்த், தாமஸ், முரளி ஆகியோர் வழங்குகின்றனர்.
தியாகராய நகர் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு அர்ச்சனைக்கு தயாளன், வேலு, சீனு, ஜெகன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். 12-ந்தேதி பூந்தமல்லியில் நடக்கும் பிறந்தநாள் கூட்டத்தில் நடிகர் லாரன்ஸ், டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் பங்கேற்று ஏழைகளுக்கு இலவச தையல் மெஷின் வழங்குகின்றனர். ரவிச்சந்திரன், சம்பத், மோகன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
No comments:
Post a Comment