Pages

Sunday, November 22, 2009

இளையராஜா மீது கேரளா மந்திரி கண்டனம்

கேரளாவின் சரித்திர காலத்தில் வாழ்ந்த பழசிராஜா குறித்த சினிமா படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

மம்முட்டி, சரத்குமார் நடித்த இப்படத்தின் பாடல்களை மலையாள பாடலாசிரியர் ஓ.என்.வி.குரூப் எழுதியுள்ளார். இந்த பாடல்கள் குறித்து அன்மையில் இளையராஜா விமர்சனம் செய்திருந்தார்.

பாடலாசிரியர் ஓ.என்.வி.குரூப் குறித்து இளையராஜா விமர்சனம் செய்தமைக்கு கேரள கல்விதுறை மந்திரி பேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவை போன்று ஓ.என்.வி.குரூப்பும் பிரபலமானவர்தான். இதை இளையராஜா மறந்துவிடக்கூடாது. ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment