இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய உடைகள் மற்றும் நினைவு பொருட்கள் ஏலத்தில் விடப்படும் என நியூயார்க்கில் உள்ள ஜுலியன் ஏல நிறுவனம் அறிவித்து இருந்தது.
எனவே, அவர் பயன் படுத்திய பொருட்களை ஏலத்தில் எடுக்க அவரது ரசிகர்களும், தொழில்அதிபர்களும் ஆவலுடன் இருந்தனர். அதன்படி ஏலத்தை ஜுலியன்ஸ் ஏல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேரன் ஜுலியன் நடத்தினார்.
அப்போது மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற வெள்ளை நிற கையுறை முதலில் ஏலம் விடப்பட்டது. அதுயாரும் எதிர்பாராத வகையில் ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு அதாவது 3 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது.
ஆனால், அந்த கையுறை ரூ.25 லட்சத்துக்கு (50 ஆயிரம் டாலருக்கு) ஏலம் போகும் என முதலில் கணக்கிடப்பட்டது. இந்த கையுறையை ஹாங்காங்கை சேர்ந்த வியாபாரி போஸ்மேன்மா ஏலம் எடுத்தார்.
இந்த கையுறை ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு ஏலம் போனாலும் கமிஷன் மற்றும் வரி உள்பட ரூ.2 கோடியே 10 லட்சம் (4 லட் சத்து 20 ஆயிரம் டாலர்) செலுத்தியுள்ளார்.
அதேபோல, மைக்கேல் ஜாக்சன் அணிந்த கருப்பு நிற மேலாடை ரூ.1 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கு (2 லட்சத்து 25 ஆயிரம் டாலர்) ஏலம் போனது. இது எதிர் பார்த்ததைவிட 20 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போனது.
ஏலம் நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள “ஹார்டு ராக்கேப்”பில் நடந்தது. இதில் அவரது ரசிகர்கள் பெரு மளவில் திரளாக கலந்து கொண்டனர்.
பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி மரணம் அடைந்தார். லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்த அவர் தீவிர பயிற்சிகளை எடுத்து வந்தார். அந்த பயிற்சி காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் மைக்கேல் ஜாக்சன் பயிற்சி காட்சிகளை வாங்கி புதிய இசைப்படமாக தயாரித்தது. அந்த படத் துக்கு திஸ் இஸ் இட் என்று பெயரிடப்பட்டது.
கடந்த மாதம் 28-ந்தேதி இந்த படம் உலகம் முழு வதும் வெளியிடப்பட்டது. அமெரிக்காவுக்கு அடுத்தப் படியாக ஜெர்மன், இங் கிலாந்து, ஜப்பான் நாடுகளில் இந்த படம் அதிக பிரதிகள் வெளியிடப்பட்டது.
திஸ் இஸ் இட் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் 2 வாரத்தில் இந்த படம் ரூ. 500 கோடி வாரி குவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த படியாக ஜப்பான் நாட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடைசியாக நடித்த சினிமா படம் “தி இஸ் இட்”. இப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இப்படத்தை கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

உலகம் முழுவதும் நேற்று ஒருநாள் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் ரூ.35 கோடியே 20 லட்சமும், இங்கிலாந்தில் ரூ.63 கோடியே 50 லட்சமும், பிரான்சில் ரூ.5 கோடியே 70 லட்சத்துக்கும் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment