Pages

Friday, November 20, 2009

செக்ஸ் அர்ச்சகரின் காதலி தற்கொலை ?

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டவர் அர்ச்சகர் தேவநாதன். இவர் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடும் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த செல்போனை பழுது பார்க்க கடையில் கொடுத்த போது அந்த ஆபாச படம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையறிந்த அர்ச்சகர் தேவநாதன் தனது குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். போலீசார் தேவநாதனை தேடி வந்தனர்.

இதனையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று நீதிமன்றத்தில் தேவநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர். மீண்டும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் போலீசார் கேட்டனர். ஆனால் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி மறுத்தார். இதையடுத்து தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.

செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்ததும் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றதும் காட்டுத்தீ போல பரவியது. தேவநாதனுடன் கோவிலில் மற்றும் பல இடங்களில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட பெண்கள் திடீரென மாயமானார்கள். தாங்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என பயந்து சிலர் குடும்பத்துடன் மாயமானார்கள்.

காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரின் மனைவி தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் அவர் தற்கொலைக்கு முயன்ற தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காஞ்சீபுரத்தில் பல வி.ஐ.பி. குடும்ப பெண்களும் இந்த செக்ஸ் வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment