
போரில் கிடைத்த வெற்றி புகழை பெறுவதில் இவருக்கும், அதிபர் ராஜபக்சேக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ராஜினாமா செய்த சரத்பொன்சேகா அடுத்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து நிற்க தயாராகி வருகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ராஜபக்சேயின் சிங்கள அரசு பொன்சேகாவை முடக்க அடுத்தடுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு வீட்டை உடனே காலி செய்யுமாறு சரத் பொன்சேகாவுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
பொன்சேகா தற்போது கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த வீட்டை விட்டு வெளியேறி சென்று விட வேண்டும் என்று அவருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
இதனால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் பொன்சேகா அவசரம், அவசரமாக வாடகைக்கு வீடு பார்த்து வருகிறார். ஆனால் அவருக்கு வீடு கிடைக்கவில்லை.
கடந்த 2 நாட்களில் 15 வீடுகளை பொன்சேகா சென்று பார்வையிட்டார். ஆனால் அந்த 15 வீட்டுக்காரர்களையும் சிங்கள அரசு கடுமையாக மிரட்டியது.
இதனால் அவர்கள் பொன் சேகாவுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்து விட்டனர். இது அவரை தவிப்புக்குள் ஆழ்த்தி உள்ளது.
No comments:
Post a Comment