Pages

Friday, November 20, 2009

காம அர்ச்சகர்ளை உருவாக்கும் கோயில்கள் ?

காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்தவர் தேவநாதன் (வயது 35). இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமீபத்தில் வெளியானது. கருவறையின் ஒரு ஓரத்தில் சுவரில் சாய்ந்தபடி நிற்கும் பெண்ணை அர்ச்சகர் தேவநாதன் கட்டிப்பிடித்து காம சேட்டைகள் செய்யும் காட்சி சென்னை, காஞ்சீபுரம் பகுதிகளில் செல்போனிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து தேவநாதன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த தேவநாதன் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். மாஜிஸ்திரேட்டு சுதா, அர்ச்சகர் தேவநாதனை வருகிற 30-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக தேவநாதனை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது தேவநாதனுக்கு எத்தனை நாள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியவரும்.

இதற்கிடையே அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாக தொடங்கியுள்ளன. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த சி.டி.க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்கு விலை போன ஆபாச சி.டி. தற்போது 500 ரூபாய்க்கு விலை பேசப்படுகிறது.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காஞ்சீபுரத்தில் உள்ள சி.டி. கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். காந்தி ரோடு, கலவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சி.டி. கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 1000 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சீபுரம் கலவை ரோட்டில் கிருஷ்ணா ரேடியோஸ் என்ற கடையில் ஆபாச சி.டி.க்கள் பதிவு செய்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த கடையில் இருந்த கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற படங்கள் இருந்தன. இதனை பார்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த கடையில் இருந்த செந்தில்குமார் (30). என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சீபுரம் கவரை தெருவை சேர்ந்த இவரிடம்தான் தனது செல்போனை பழுது பார்க்க தேவநாதன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அர்ச்சகர் செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காப்பி செய்து செந்தில்குமார் பல பிரிண்டுகள் போட்டு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கிளு கிளு படங்கள் அடங்கிய இந்த கம்ப்யூட்டர் பற்றிய அனைத்து தகவல்களையும் சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பட்டாபிராமனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை முறைப்படி கோர்ட்டில் இருந்து வாங்கி பரிசோதித்து பார்க்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆபாச சி.டி.க்கள் சென்னையில் தற்போது அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது. ஆபாச படங்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வக்கிர கும்பல் ஒன்று அர்ச்சகரின் ஆபாச சி.டி.க்களையும் மிக மிக ரகசியமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இக்கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment