பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு டெலிவிஷன்களிலும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சென்னை சூளைமேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிட்டிபாபு மீது தியாகராயநகரில் உள்ள நிதி நிறுவன உரிமையாளர் ஆனந்த் என்பவர் சைதாப்பேட்டை 17-வது நீதிமன்றத்தில் செக்மோசடி வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
காமெடி நடிகர் சிட்டிபாபு எங்கள் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனுக்காக செக்குகள் கொடுத்திருந்தார். அவற்றை வங்கியில் போட்ட போது பணம் இன்றி திரும்பிவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது சிட்டிபாபு கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து சிட்டி பாபுவை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment