அந்த புடவையின் விலை ரூ.50 லட்சம். நவீன வேலைப்பாடுகளுடன் அந்த புடவை தயார் செய்யப்பட்டு இருந்தது. பாந்த்ராவில் உள்ள பிரபல கடையொன்றில் “டிசைன்” செய்து அப்புடவையை வாங்கினார்.
ஷில்பாஷெட்டி கழுத்திலும் கை, தலை, காது, இடுப்புபகுதிகளிலும் விதவிதமான நகைகளை அணிந்து இருந்தார். அந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியாகும்.
வெளிநாட்டு பத்திரிகையொன்று திருமண படங்களை விசேஷமாக எடுத்து பிரசுரிக்கும் உரிமை பெற ஷில்பாவை அணுகியது, அதற்காக ரூ.57 லட்சம் பணம் கொடுக்கவும் முன்வந்தது. அதற்கு ஷில்பா மறுத்துவிட்டார்.
ஷில்பா, ராஜ்குந்த்ரா திருமணம் முடிவாகி முகூர்த்த தேதி பார்க்க 8 மாதம் அவகாசம் எடுத்துள்ளனர். ஷில்பா உறவினர்கள் எண் கணித ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். எனவேதான் பல தடவை ஆராய்ந்து யோசித்து இந்த தேதியை முடிவு செய்தார்கள்.
ராஜ்குந்த்ராவுக்கு ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். ஷில்பா ஷெட்டிக்கு ராஜ்குந்த்ராவை விட இரண்டு வயது அதிகம்.
கணவன் மனைவி இருவரும் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளனர். ஷில்பாவுக்கு சினிமாவை விட தொழில் அதிபர் ஆவதில்தான் அதிக விருப்பமாம்.
இருவரும் இணைந்த திருமணத்துக்கு முன்பே லண்டனில் தொழில் நிறுவனங்களை துவக்கினர். லண்டனில் தங்கி தொழிலை மேலும் வளர்க்க ஷில்பா முடிவு செய்துள்ளாராம்.
இதற்காக ஷில்பா ஷெட்டிக்கு ஏற்கனவே அங்கு மாளிகைபோன்ற ஒரு வீட்டை ராஜ்குந்த்ரா வாங்கி பரிசாக அளித்துள்ளார். ஷில்பாவுக்கு 9 மொழிகள் தெரியும். நடனம் கற்றவர் கைப்பந்து வீராங்கனை.
லண்டன் புறப்படுவதற்கு முன் இருவரும் பகாமா தீவுக்கு தேனிலவு செல்கிறார்கள்.
No comments:
Post a Comment