Pages

Monday, November 23, 2009

என்னடா இது பொம்பளை சிகரெட் பிடிச்ச தப்பா ?

நேரம்: மாலை 6 மணி

இடம்: கிண்டி-சைதாப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை.

பரபரப்பான நேரம் என்பதால் வாகனங்கள் சர்ரென்று பறந்து கொண்டிருந்தன.

அந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரும் வாகன கூட்டத்தில் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.

காருக்குள் இருந்த பெண்ணுக்கு வயது இருபது இருக்கும். டைட் ஜீன்ஸ் பேன்ட் அதற்கு மேட்சாக சட்டை அணிந்து கழுத்தில் தொங்க விட்டிருந்த அடையாள அட்டை அவர் ஏதோ சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்பதை அடையாளம் காட்டியது.

ஒய்யாரமாய் காருக்குள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த அந்த பெண் மணி ஒரு பையில் சிகரெட்டை புகைத்தப்படி ரோட்டில் பாய்ந்து சென்ற கார்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

பரபரப்பான நகரம் என்பதால் அந்த காரை சுற்றிலும் பல வாகனங்கள் அணி வகுத்து சென்றன.

சுருள் சுருளாய் அந்த பெண்மணி விட்ட சிகரெட் புகையை பார்த்தவர்கள் “காலம் கெட்டுப்போச்சு” என்று மனதுக்குள் நினைத்தப்படியே கவனமாக வாகனத்தை விரட்டினார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்மணி காருக்கு வெளியே சிகரெட் சாம்பலை சுண்டி விட்டார். அந்த சாம்பல் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு வாலிபரின் கண்ணில் விழுந்தது. எரிச்சல் அடைந்த அந்த வாலிபர் “ஏய் சிகரெட்டை பார்த்துகுடி” என்று சத்தம் போட்டார்.

அதை கேட்டு எரிச்சலடைந்த அந்த பெண்மணியும் “போடா போ...” என்று ஏக தாளத்தில் பதில் சொன்னார்.

அதை கேட்டு கோபம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை காருக்கு முன்னாள் நிறுத்தி வழிமறித்தார். சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே கார் ஓரங்கட்டப்பட்டது.

ஏய், என்ன... திமிரா...? என்று அந்த பெண்ணிடம் கடும் கோபத்தில் கேட்டார்.

அதை கேட்டு கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த பெண்மணி படையப்பா ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் அந்த வாலிபருடன் மோதினார். கையில் இருந்து சிகரெட் துண்டை அவர் மீது வீசி எறிந்தார். வாய்க்கு வந்தபடி கன்னா பின்னா என்று திட்டிய படி எங்கிட்ட மோதாதே என்பது போல் சொக்கா கையை சுருக்கி கோதாவில் இறங்கினார்.

இதை பார்த்ததும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி விட்டனர். விபரத்தை கேட்டதும், இளைஞர்களும் ஆவேசம் அடைந்தனர்.

பொம்பளை உனக்கு இவ்ளோ திமிருன்னா ஆம்பளை எங்களுக்கு எவ்வளவு திமிரு இருக்கும்! ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேள் என்று கோரசாக குரல் எழுப்பினார்கள்.

எதையும் சட்டை பண்ணாத அந்த பெண் மணியோ “மன்னிப்பா... அதெல்லாம் முடியாது. வழிய விடுங்க இல்லாட்டி நப்பதே வேறு என்று மிரட்டினார். கையில் இருந்த செல்போனில் யார் யாருக் கெல்லாமோ தொடர்பு கொண்டு பேசினார்.

அந்த வாலிபரும் அவசர உதவிக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இந்த அமர்க்களத்தை சுமார் 50 நிமிடம் பொதுமக்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். கிண்டியில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற அந்த பெண்மணி நேரம் செல்ல செல்ல பதட்டம் அடைந்தார்.

வேலைக்கு போகணும் காரை விடுங்க என்று கத்தினார்.

அம்மாடி... செய்த தப்புக்கு மன்னிப்பு கேக்காட்டி இங்கிருந்து நகர விட மாட்டோம் என்று வாலிபபட்டாளங்கள் கறாராக கூறி விட்டது.

நிலைமை புரிந்ததும் காரை விட்டு இறங்கி வந்த அந்த பெண்மணி “சரி, மன்னிச்சுக்கோப்பா..” என்றார். இதைத்தானே நாங்களும் முதலிலேயே சொன்னோம். என்றபடி காரை நகர அனுமதித்தனர்.

கார் புறப்பட்டதும் கண்ணாடியை இறக்கி பாபா ஸ்டைலில் இரு விரல்களை காட்டியபடி அந்த பெண்மணி சென்ற தன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.

சற்று தூரத்தில் இருந்த டீ கடையில் எப்.எம். ரேடியோவில் கேட்டது, “இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை. இங்கிலீசு படிச்சாலும் எங்க தமிழ் நாட்டுல இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை...” என்ற பாடல். அதை கேட்டு சிரிப்பு தான் வந்தது.

No comments:

Post a Comment