ராஜ்குந்த்ராவும் அதை ஏற்று விவகாரத்து பெற்றார். திருமணமான ஒரு வரை மணக்க வேண்டிய அவசியம் ஏன்? என்று ஷில்பாவிடம் கேட்டபோது இந்த மாதிரி கேள்வி எழுவது எனக்கு வேதனையாக உள்ளது. என் குடும்பத்திற்கு

கெட்ட பெயர் வாங்கி கொடுத்து விட்டேனே என வருந்துகிறேன். என்ன செய்வது ராஜ் குந்திராவுடன் எனது திருமண வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதால் திருமணத்துக்கு தயாராகி விட்டேன் என்றார்.
கரீனாகபூர் காதலித்து திருமணம் செய்யப்போகும் சயீப்அலிகானும் திருமணமானவர்தான். நடிகை அம்ருதா சிங்கை மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார். சயீப்பை விட அம்ரிதா 6 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்ருதாவிடம் விவாகரத்து வாங்கி கரீனாவை மணக்க தயாராகி விட்டார். சயீப்அலிகான் பழம்பெரும் நடிகை ஷர்மிளாதாகூரின் மகன்.
கரீனாகபூரின் அக்காள் கரிஷ்மாகபூர் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்காகவே சஞ்சய் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. சமீரா எனும் மகள் இருக்கிறார். கரிஷ்மாகபூருக்கும், அபிஷேக்பச்சனுக்கும் காதல் என முதலில் கிசுகிசு பரவி பிறகு அவர்கள் உறவு ஏனோ முறிந்துபோனது.
பழைய நடிகைகள் ஷபனாஆஸ்மி, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ரவீனா தாண்டன் ஆகியோரும் திருமணமானவர்களையே கணவர்களாக்கி கொண்டனர். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஷபனா ஆஸ்மி சினிமா திரைக்கதையாசிரியர் ஜாவெத் அக்தருடன் காதல் வயப்பட்டார். ஜாவெத்துக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்தனர். ஷபனா காதலை ஏற்று முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.
இந்தி திரையுலகில் கனவு கன்னி என அழைக்கப்பட்ட ஹேமமாலினி நடிகர் தர்மேந்திராவை மணக்க முடிவு செய்த போது விமர்சனங்கள் கிளம்பின. தர்மேந்திரா அப்போது பிரகாஷ் கவுரை மணந்து சன்னிடியோல், பாபிடியோல் மற்றும் இரண்டு மகள்களுக்கு தந்தையாக இருந்தார். அவர்களை பிரியாமல் ஹேமமாலினியை மணக்க விரும்பி சட்ட பிரச்சினை ஏற்படாமல் இருக்க முஸ்லிமாக மதம் மாறினார். தற்போது இந்த ஜோடிக்கு இஷா, அஹானா என இருமகள்கள்.
தென்னிந்திய சினிமாவில் கனவு கன்னியாக இருந்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகிலும் புகழின் உச்சிக்கு போனார். அங்கு போனிகபூரை மணந்தார். இந்தி பிரபல நடிகர் அனில்கபூர் சகோதரர் போனிகபூர். இவர் தயாரித்த லம்ஹே, மிஸ்டர் இந்தியா படங்களில் ஸ்ரீதேவி நடித்தபோது காதல் மலர்ந்தது. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் முதல் மனைவியை பிரிந்து ஸ்ரீதேவியை போனிகபூர் மணந்தார்.
திரைப்பட விநியோகஸ்தர் அனில் தண்டாணியை ரவீனாதாண்டன் காதலித்து மணந்தார். ரவீனாவை மணக்க அனில் தனது முதல் மனைவி நடாஷா ஷிப்பியை விவாகரத்து செய்தார். இந்தி திரையுலகின் கவர்ச்சி கன்னியாக விளங்கிய ஹெலன்.ஒரு காலத்தில் இளைஞர்களின் இதய துடிப்பாகவே திகழ்ந்தார். இவரை காபரே நடனத்தில் யாரும் மிஞ்ச முடியாது என்பார்கள். பெரும் கவர்ச்சி புயலான ஹெலன் சினிமா கதாசிரியர் சலீம்கான் மீது காதல் வயப்பட்டார். சலீம்கான் அப்போது சல்மாகானை மணந்து தற்போதைய சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான், அல்வீரா போன்ற 4 மகன்களுக்கு தந்தையாக இருந்தார். கூடவே ஹெலனையும் மணந்து குடும்பம் நடத்தினார்.
இதுபோல் திருமணமானவரை மணந்த இன்னும் பல நடிகைகள் இந்தி திரையுலகில் உள்ளனர். சிலரின் வாழ்க்கை நல்லவிதமாக உள்ளது. இன்னும் சிலர் பிரிந்து வாழ்கிறார்கள். 2-ம் திருமணம் சரியா? தவறா? என்ற கேள்விக்கு பதில் கிடைப்பது கஷ்டம். சந்தோஷமாக குடும்பம் நடத்துபவர்கள் இது சரியான முடிவுதான் என்கின்றனர். பிரிந்து வாழ்பவர்கள் மிகப்பெரிய தவறு செய்து விட்டோம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment