Pages

Wednesday, November 18, 2009

ரூ.12 கோடி வசூல்

சரத்குமார், மம்முட்டி இணைந்து நடித்த பழசிராஜா படம் மலையாளம், தமிழில் தயாராகியுள்ளது. பத்மபிரியா, கனிகா ஆகியோரும் நடித்துள்ளனர். வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழசிராஜா மன்னனை பற்றிய கதையே இப்படம். மம்முட்டி அரசன் வேடத்திலும் சரத்குமார் படைத்தளபதி கேரக்டரிலும் வருகின்றனர்.

கேரளாவில் மூன்று வாரங்களுக்கு முன்பு ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இதுவரை அங்கு ரூ.12 கோடி வசூல் ஈட்டியுள்ளது. தமிழில் பழசிராஜா படம் வருகிற 20-ந் தேதி வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. அடுத்த கட்டமாக தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.

மலையாள மொழியில் ஏற்கனவே அமெரிக்கா, துபாய் நாடுகளில் ரிலீசாகியுள்ளது. அங்கும் ஒருவாரம் “ஹவுஸ் புல்” காட்சிகளாக வெற்றிகரமாக ஓடுகிறது. இதன் தமிழ் பதிப்பு சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ் படத்தில் முன்னுரையாக கமல் குரல் கொடுத்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் குரல் கொடுக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் பேசி உள்ளார்.

பழசிராஜா படத்தை விளம்பரபடுத்த சென்னையில் சிறப்பு வேன் வலம் வருகிறது. இதில் மம்முட்டி, சரத்குமாரின் பழசிராஜா பட கேரக்டர்கட் அவுட்கள் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment