இப்படத்தை விளம்பர படுத்தி மும்பை நகரமெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் கரீனாகபூர் முதுகை காட்டியபடி அரை நிர்வாணத்தில் போஸ் கொடுத்துள்ளார். அருகில் கரீனாவை சயீப் உற்றுபார்த்தபடி நிற்கிறார்.
இந்த போஸ்டருக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தெருக்களிலும் சாலைகளிலும் ஒட்டப்பட்டிருந்த கரீனாகபூர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். குர்பான் திரையிடப்பட உள்ள தியேட்டர்கள் முன்னால் திரண்டும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். குர்பான் படத்தை திரையிட கூடாது என்று தியேட்டர்காரர்களை மிரட்டினர்.
கரீனாகபூரின் அரை நிர்வாண போஸ்டரில் சில தொண்டர்கள் சேலை கட்டிவிட்டனர். மேலும் கரீனாகபூர் வீட்டிலும் ஏராளமான தொண்டர்கள் சேலையுடன் திரண்டனர். கரீனாகபூருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். கையில் வைத்திருந்த சேலைகளை வீட்டுக்குள் எறிந்தனர். அப்போது கரீனா வீட்டில் இல்லை. படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை அப்புறப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வழக்கு பதிவும் செய்யப்பட்டு உள்ளது.
குர்பான் படம் தீவிரவாதிகள் பற்றிய கதை. நிஜகாதலர்களான கரீனா கபூரும், சயீப்அலிகானும் இதில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் கரீனாகபூர் உடல் நலமின்றி இருக்கும் தந்தையை காண டெல்லி வருகிறார். அப்போது டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் சயீப்அலிகானை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கின்றனர்.

கரீனாவுடன் அமெரிக்கா செல்கிறார். அங்கு போன பிறகுதான் சயீப் தீவிரவாதி என்று தெரிந்து கரீனா அதிர்ச்சியாகிறார். ஒரு விமானத்தை கடத்தி குண்டு வைத்து தகர்க்க சயீப்திட்டமிடுகிறார். அதில் நிருபர் விவேக் ஓபராய் பயணம் செய்கிறார். விவேக் ஓபராய் உதவியுடன் பயணிகளை கரீனாகபூர் காப்பாற்றுவது கிளைமாக்ஸ்.
No comments:
Post a Comment