Pages

Thursday, November 19, 2009

லண்டன் ஸ்டைல் கொலை ?


இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பிரைன் தாமஸ் (59). இவரது மனைவி கிறிஸ்டினா (57). இவர்கள் தங்கள் 2 குழந்தைகளுடன் கார்டிகர்கள் ஷயர் என்ற இடத்துக்கு வேனில் சுற்றுலா சென்றனர்.

அங்கு இரவில் வேனிலேயே படுத்து தூங்கினார்கள்.

அப்போது பிரையன் தாமசுக்கு கனவு வந்தது. அதில் வேனுக்குள் திருடன் ஒருவன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு நுழைவது போல கனவு கண்டார்.

கனவில் திருடனை மடக்கி பிடித்து அவன் கழுத்தை பிடித்து நெரித்தார். உண்மையில் அவர் அருகில் படுத்திருந்த மனைவி கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் அவர் உயிர் இழந்தார்.

இது தொடர்பாக பிரைன் தாமசை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு விசாரணையின்போது கனவில் திருடனை கொல்வதாக நினைத்து மனைவியை கொன்று விட்டேன் என்று கூறினார். அப்போதுதான் இந்த விஷயம் வெளியே வந்தது.
ஆனால் அவர் சொல்வது உண்மைதானா? என்பதை கண்டறிய விஞ்ஞான பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment