Pages

Thursday, November 19, 2009

கள்ள காதல் - கல்லால் அடித்து கொலை


ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா நாட்டில் ஒரு பகுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஷரியத் சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள வாஜித் என்ற இடத்தைச் சேர்ந்த திருமணமாகாத 20 வயது பெண். வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டார்.

ஷரியத் சட்டப்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கலாம்.

இந்த பெண்ணை கோர்ட்டு முன்பு நிறுத்தினார்கள். நீதிபதி அவளுக்கு மரண தண்டனை வழங்கினார். கல்லால் அடித்து தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார். அவருடைய காதலனுக்கு 100 கசையடி வழங்கும்படி தீர்ப்பு கூறினார்.

அதன்படி அந்த பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 200 பேர் சுற்றி நின்று கல்லால் அடித்து அவரை கொன்றனர்.

அவருடைய காதலருக்கு அதே இடத்தில் 100 கசையடி கொடுக்கப்பட்டது.

இந்த மாதம் முதல் வாரத்தில் இதே போல கள்ளக்காதல் ஜோடி ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஆணை கல்லால் அடித்து கொன்று விட்டனர். பெண் கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இதே போல கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கல்லால் அடித்து கொன்றனர்.

No comments:

Post a Comment