Pages

Tuesday, November 10, 2009

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தேனி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப் பட்டி தொகுதிக் குட்பட்ட பகுதிகளை தண் ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் வாழை, தென்னை, எலுமிச்சை உள்ளிட்ட பல பயிர் கள் நாசமடைந்துள்ளன.


திருவாரூர் மாவட்டத் தில் உள்ள ஆறுகள் சரியாக தூர்வாரப்படாததன் காரணமாக, கிளை ஆறுகளான கூழையாறு, வளவனாறு போன்ற ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு இரண் டரை லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பரம்பிக்குளம் ஆழியாறு திட் டத்தின் உயிர்நாடியான காண்டூர் கால்வாயில் உடைப்பு ஏற்பட் டுள்ளதால், திருமூர்த்தி அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் வருமானம் இன்றி தவித்துக் கொண்டிருக்கின் றனர். பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட் டுள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாலுகாக்களை சேர்ந்த பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின் றன.


பெருவெள்ளம் ஏற்படும் போது பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிவதால் சென்னையில் கொட்டி வாக்கம், நீலாங் கரை, பாலவாக்கம், ஈஞ்சம் பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளத் தில் மூழ்கி விடுகின்றன. அ.தி.மு.க., ஆட்சியில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது அனைவருக்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் உட்பட வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு இழப்பீடாக, ஒரு ஏக்கருக்கு 3,000 ரூபாய், தென்னைக்கு ஏக்கர் ஒன் றுக்கு 4,800 ரூபாயும் வழங்கப்பட்டது. தற்போது விலைவாசி மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், பயிருக்கான இழப்பீட்டுத் தொகையும், வெள்ள நிவராணத் தொகையும் மூன்று மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, முதல்வர் கருணாநிதியை பாதிக்கப்பட்ட மக் கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment