மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் மேந்தோலா. இவருக்கும் நடிகை கத்ரீனா கைப்புக்கும் திருமணம் நடந்துள்ளதாக இந்தூர் நகராட்சி அளித்ததாக சான்றிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2008 டிசம்பர் 2-ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதை டிசம்பர் 11-ம் தேதி நகராட்சியில் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிலர் வேண்டுமென்ற இவ்வாறு போலிச் சான்றிதழ் தயாரித்து வெளியிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இது குறித்து இந்தூர் மாநகராட்சி திருமணப் பதிவாளர் நட்வர் சர்தா கூறுகையில், "விஷமிகள் சிலர் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியில் தரப்படும் திருமண சான்றிதழை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் உதவியுடன் அதில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் போலீஸில் புகார் தெரிவிக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றார் அவர்.
No comments:
Post a Comment