கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய "கடைசிப் புகையின் கல்லறை' என்ற சமூக வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நூல் வெளியீட்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் சேரன் பெற்றுக் கொண்டார்.
"நல்ல, தரமான திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டும். தரமான திரைப்படங்களுக்கான தயாரிப்பு செலவை அரசே அளிக்க வேண்டும். ஆண்டுக்கு குறைந்தது 20 தரமான திரைப்படங்களுக்காவது அரசின் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். மேலும் தரமான திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மக்களையும் நாம் தயார்படுத்த வேண்டும்" என்றார் ராமதாஸ்.
No comments:
Post a Comment