Pages

Saturday, November 7, 2009

ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை

தமிழை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.


பொதுத் தேர்வில், தமிழை பாடமாக கொண்டு, முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அரசு சார்பில் கவுரவிக்கப் படுகின்றனர். கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு, மெட்ரிக் வகுப்புக்கு முதல் பரிசு - 7,500 ரூபாய், இரண்டாம் பரிசு -6,000, மூன்றாம் பரிசு - 5,000, பிளஸ் 2 வகுப்புக்கு முதல் பரிசு -15 ஆயிரம், இரண்டாம் பரிசு - 12 ஆயிரம், மூன்றாம் பரிசு - 10 ஆயிரம் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டு முதல், பரிசுத் தொகை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment